1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 ஜூன் 2021 (16:05 IST)

வழக்கறிஞர் தனுஜாவுக்கு மீண்டும் முன்ஜாமீன் மறுப்பு!

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஜா ராஜன் மற்றும் அவரது மகள் காவல்துறையினரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வழக்கறிஞருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில் வழக்கறிஞர்கள் தனுஜா மற்றும் அவரது மகள் ஊரடங்கு விதிகளை மீறி காரில் சென்றதாக தெரிகிறது. இதனை காவல்துறையினர் தட்டி கேட்டபோது காவல்துறையினரை மிரட்டும் வகையில் வழக்கறிஞர் நடந்துகொண்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது
 
இந்த நிலையில் வழக்கறிஞர் மற்றும் அவரது மகள் கைது செய்யப்பட வாய்ப்புள்ள நிலையில் இருவரும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடந்த போது வழக்கறிஞர் தனுஜாவை நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்து முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது
 
இந்த நிலையில் இன்று மீண்டும் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது தனுஜா மகளுக்கு மட்டும் முன்ஜாமீன் அளித்த நீதிபதிகள் தனுஜாவுக்கு முன்ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வழக்கறிஞர்கள் தவறு செய்யும்போது பார்கவுன்சில் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான விதிகளை கொண்டுவரவேண்டும் என்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.