குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்யக்கூடாது: ராஜேந்திர பாலாஜி வழக்கு குறித்து நீதிமன்றம்!
ராஜேந்திர பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்யக்கூடாது என நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது..
ரூபாய் 3 கோடி வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் மற்றும் டிரைவர் கைது செய்யப்பட்டதை அடுத்து ராஜேந்திர பாலாஜி குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களிடம் 12 மணிநேரம் விசாரணை செய்தது தவறு என்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை எப்படி வேண்டுமானாலும் தேடிக் கொள்ளுங்கள் என்றும் ஆனால் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்
குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை தேவைப்பட்டால் அவர்களுக்கு முறையான சம்மன் அனுப்பி விசாரணை செய்து கொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.