வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 26 மே 2022 (22:13 IST)

தாஜ்மஹாலில் தொழுகை செய்த 4 பேர் கைது!

taj mahal
தாஜ்மஹாலில் விதிகளை மீறி தொழுகை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலில் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் நேற்று புதன்கிழமை நான்கு சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹால் வளாகத்தில் தொழுகை நடத்தியதாக கைது செய்யப்பட்டனர் 
 
கைதானவர்களில் மூவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் தொழுகை செய்த மற்ற இருவர் தப்பி ஓடி விட்டதாகவும் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது