சுருக்கு மடி வலைக்கு அனுமதி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
மீன்பிடித் தடைகாலத்தில் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி வேண்டும் என்ற வழக்கில் நீதிமன்றம் பதிலளித்துள்ளது.
வங்க கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு தொடரும். இதனால் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறைவான அளவு படகுகள் கரையோர பகுதிகளில் மட்டுமே மீன்பிடிப்பதால் வரும் நாட்களில் மீன்கள் வரத்து குறையும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடலில் 5 கி மீ தூரத்துக்குள் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க சம்மதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அதற்கும் நீதிமன்றம் மறுத்துள்ளது.