1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (09:22 IST)

போலி தங்க காசை கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர்! – அதிர்ச்சியில் மக்கள்!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் போலி தங்க காசை கொடுத்து மக்களை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியின் 36வது வார்டில் காங்கிரஸ், அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகளுடன் 2 சுயேட்சை வேட்பாளர்களும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர். இந்த வார்டு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவை சேர்ந்த மணிமேகலை என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டார்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது மணிமேகலை வாக்காளர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயங்களை வழக்கியதாக கூறப்படுகிறது. அவற்றை மக்கள் விற்க சென்றபோது அது போலி என தெரிய வந்துள்ளது. போலி தங்க நாணயங்களை கொடுத்தது பற்றி மக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில் அந்த வார்டில் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.