காலியாக இருக்கும் 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு.. கடைசி தேதி என்ன?
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப சமீபத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை அடுத்து நவம்பர் 7ஆம் தேதி முதல் இந்த இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று முதல் அந்த கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக இருக்கும் 69 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் மாநில அரசு கலந்தாய்வு முடிவில் காலியாக இருக்கும் 17 இடங்கள் என மொத்தம் 86 இடங்களுக்கு இன்று முதல் அதாவது நவம்பர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து மாணவர்கள் https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.