2000 ரூ நிவாரணம் மற்றும் மளிகைப் பொருள்கள்… இன்று முதல் விநியோகம்!

Last Modified செவ்வாய், 15 ஜூன் 2021 (09:00 IST)

கொரோனா இரண்டாம் கட்ட நிவாரணம் மற்றும் மளிகை பொருள்கள் வழங்குதல் இன்று முதல் நடக்க உள்ளது.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாயில் முதல் தவணை 2000 ரூ வழங்கப்பட்டது. இதையடுத்து அடுத்த தவணையும் மற்றும் 13 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் இப்போது வழங்கப்பட உள்ளது.

இந்த நிவாரணத்தை ஜூன் 3 ஆம் தேதியே முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதையடுத்து இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் நிவாரணப் பொருள்களும் பணமும் வழங்கப்பட உள்ளன.இதில் மேலும் படிக்கவும் :