திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 26 மே 2020 (09:17 IST)

சென்னையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சி தகவல்!

சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 50 வயது நோயாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்து தற்போது 17,000 ஐ நெருங்கிக் கொண்டு இருக்கிறது. அதிலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தினமும் 500 பேருக்கு மேல் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதிக்கப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.