வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஜூன் 2024 (14:24 IST)

தேசிய தேர்வு முகமையில் 25 ஊழியர்கள் கூட இல்லை: காங்கிரஸ் அதிர்ச்சி தகவல்..!

தேசிய தேர்வு முகமை அமைப்பில் 25 நிரந்தர ஊழியர்கள் கூட இல்லை என்றும் அந்த அமைப்பு எப்படி இத்தனை தேர்வுகளை நடத்தலாம் என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நீட் உள்ளிட்ட பல முக்கிய தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் என்பவர் தேசிய தேர்வு முகமை அமைப்பில் 25 நிரந்தர ஊழியர்கள் கூட இல்லை என்றும் ஆனால் ஆண்டுக்கு இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட தேர்வுகளை எப்படி நடத்துகிறது என்றும் குற்றம் காட்டியுள்ளார் 
 
குறைந்த ஊழியர்களை வைத்திருக்கும் தேசிய தேர்வு முகமையை தேர்வு நடத்த சொல்லி மத்திய அரசு சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் குற்றம் காட்டி உள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவது போல் இருக்கிறது என்றும் நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடு மற்றும் குழப்பங்களே இதற்கு உதாரணம் என்றும் அவர் கூறியுள்ளார் ’
 
நாடு முழுவதும் தேர்வுகள் நடத்தும் ஒரு அமைப்பில் 25 நிரந்தர ஊழியர்கள் கூட இல்லாமல் எப்படி நடத்தப்படுகிறது என்ற கேள்விக்கு மத்திய அரசிடம் இருந்து என்ன பதில் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Siva