வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 செப்டம்பர் 2025 (10:10 IST)

இளையராஜா விழாவா? மது விளம்பர விழாவா? ரஜினி பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்..!

Rajini Ilaiyaraja
இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டுகால இசை பயணத்தை பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
இளையராஜாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் அரசு விழாவில், மதுவுக்கு மிகப்பெரிய விளம்பரம் கொடுத்துள்ளனர். ஒரு மாநிலத்தின் முதல்வர், தனக்காக ஒரு விழா எடுக்கிறார்.
 
அதில் பெருமையாக பேசுவதை விட்டுவிட்டு, இளையராஜா, 'சொல்லிடவா சொல்லிடவா' என கேட்பதும், 'கூறுங்கள் கூறுங்கள்' என ரஜினி சொல்வதும் கொடுமை. 'ரஜினி மைக்கை பிடித்து, இளையராஜாவின் மரியாதையை காற்றில் பறக்கவிட்டு விட்டார்.
 
நானும், மகேந்திரனும் மது அருந்தினோம். அங்கு வந்த இளையராஜாவிடம், நீங்களும் போடுகிறீர்களா என கேட்டேன். அரை பாட்டில் பீர் குடித்த இளையராஜா, விடியற்காலை 3:00 மணி வரை, பெரிய அலம்பல் ஆட்டம் ஆடினார்.
 
சினிமா நடிகையரின் கிசுகிசுக்களை பற்றி கேட்பார். அந்த பேச்சுகள் தான் அவருடைய பாட்டுகள் என ரஜினி கூறினார்.
 
அவர்கள் இருவர் மீதும் மக்கள் வைத்திருந்த மரியாதையை அவர்களே தாழ்த்தி கொண்டனர்.
 
மேடை நாகரிகம் என ஒன்று இருக்கிறது என்பதை மறந்து, திரளாகக் கூடியிருந்த இடத்தில் இப்படி பேசுவது, சினிமா துறையில் உள்ளவர்கள் மீது மக்களுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran