வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : திங்கள், 31 ஜூலை 2017 (09:43 IST)

இன்று ரத்தாகுமா நீட் தேர்வு?: டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர்!

இன்று ரத்தாகுமா நீட் தேர்வு?: டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர்!

நீட் தேர்விலிருந்து இன்று அல்லது நாளை தமிழகம் விலக்கு பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றுள்ளார்.


 
 
இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கருடன் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணனும் புறப்பட்டார். இவர்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கூடிய மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற முயற்சிப்பார்கள்.
 
இதற்காக அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை நேரில் சென்று வலியுறுத்த உள்ளனர். முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இரண்டு முறை டெல்லி சென்று நீட் தேர்வு தொடர்பாக பிரதமரை நேரில் வலியுறுத்தியுள்ளனர்.
 
இந்நிலையில் தற்போது டெல்லி சென்றுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்று தந்துவிடுவார் என கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு தீர்வு கிடைத்தது போல இதற்கும் தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.