அரசு பேருந்தில் பெண்ணிடம் டிக்கெட் எடுக்க கூறிய நடத்துனர் மீது நடவடிக்கை!
திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பெண் ஒருவரை நடத்துனர் டிக்கெட் எடுக்க கோரி வலியுறுத்தியதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது
திண்டுக்கல் அரசு பேருந்தில் யசோதா தேவி என்ற பெண் தனது இரண்டரை வயது மகன் மற்றும் கைக்குழந்தையுடன் பயணம் செய்தபோது பெண்களுக்கு மட்டும்தான் இலவசம் என்றும், குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று நடத்துனர் அந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது
மூன்று வயது நிரம்பினால் தானே குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று அந்த பெண் வாதிட்ட நிலையில் கொட்டும் மழையில் அந்தப் பெண்ணையும் குழந்தையையும் நடத்துநர் பேருந்திலிருந்து இறங்கி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது