செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (11:25 IST)

பத்தல.. பத்தல..னு பாட்டு எழுதிய கமல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

மத்திய அரசை விமர்ச்சித்து பாடல் வெளியிட்ட விக்ரம் படத்தின் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார். 
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்த படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேற்று முதல் சிங்கிள் பாடலான “பத்தல.. பத்தல..” பாடல் வெளியானது. அரசியல் பகடி வரிகளும் கலந்து வெளியான இந்த பாடல் வைரலாகியுள்ளது.
 
இந்த பாடல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல் வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு!” என்று பதிவிட்டுள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் பாடல் வெளியிட்டுள்ள நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். 
 
அதில், விக்ரம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை நீக்க வேண்டும், மத்திய அரசை விமர்ச்சித்து பாடல் வெளியிட்ட விக்ரம் படத்தின் நடிகர் கமலஹாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.