செல்போன் டவரைக் காணவில்லை என போலீஸில் புகார்
நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை என போலீஸில் புகார் அளிப்பதைப் போன்று கூடல் புதூரில் செல்போன் டவரைக் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் கூடல்புதூரில் காணாமல் போன செல்போனைக் கண்டுபிடித்துத் தரக்கோரி போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
இந்த செல்போன் டவர் ரூ.28 லட்சத்தில் அமைக்கப்பட்டதாகவும் 2 நாட்களாக இந்த செல்போன் டவரைக் காணவில்லை எனவும் இதைக் கண்டுபிடித்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.