வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (14:27 IST)

தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவன்: போலீசார் விசாரணை

திருத்தணி அருகே கல்லூரி மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருத்தணி அருகே தோனிஸ்வரன் என்ற கல்லூரி மாணவர் வேற்று ஜாதி பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் திருத்தணியை அடுத்த பொன்பாடி ரயில் நிலையம் அருகே மாணவர்கள் தோனிஸ்வரன் உடல் பிணமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது 
 
இதனையடுத்து போலீசார் அங்கு சென்று அவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்
 
மேலும் மாணவர் தோனிஸ்வரன் காதலித்ததாக கூறப்படும் இளம்பெண் மற்றும் அவரது அம்மா சகோதரர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது