திடீரென தீப்பிடித்து எரிந்த கல்லூரி பேருந்து : பரபரப்பு செய்திகள்

chennai
Last Updated: வியாழன், 12 செப்டம்பர் 2019 (18:14 IST)
சென்னை, பெருங்களத்தூர் அருகே நின்றிருந்த தனியார் பேருந்து ஒன்று, திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, பெருங்களத்தூர் அருகே , ஒரு தனியார் கல்லூரி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதில், திடீரென்று கரும்புகை வெளிவரத் தொடங்கியதால், ஓட்டுநர் விழிப்புடன், பேருந்தை சட்டென நிறுத்திவிட்டு, கிழே இறங்கியதாகத் தெரிகிறது.
 
உடனே பேருந்தின் முன்பக்கப் பகுதியில் இருந்து,குபு குபு என தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனே, இதுகுறித்து, தீயணைப்புத் துறையினருக்குத் தெரிவித்தனர். விரைந்துவந்த  அவர்கள்,  தீயை அணைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.  மேலும், இந்தப் பேருந்தில் ஓட்டுநரை தவிர யாரும் பயணம் செய்யவில்லை எனத் தகவல் வெளியாகிறது.
 
இதுகுறித்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 


இதில் மேலும் படிக்கவும் :