வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2019 (17:36 IST)

ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது ’ஐன்ஸ்டீன்...’ ? கன்பியூஸான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்...கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

மத்திய வர்த்தகத் துறை அமைச்சர், பியூஸ் கோயல், இன்று, வர்த்தக மையத்தில்,  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பொருளாரத்தில் கணக்கீடுகளை கொண்டுவராதீர்கள் எனக்கூறியவர், உதாரணத்திற்கு, புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது ஐன்ஸ்டீன் எனக் கூறியுள்ளார். இது நாட்டில்,  தற்போது பேசு பொருளாகி வருகிறது.
சமீபத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆட்டோமொபைல் துறை சரிவு குறித்து பேசியபோது, ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியால் தான் ஆட்டோமொபைல் துறை சரிவடைந்தது என்றும், பொதுமக்கள் மெட்ரோ ரயிலை அதிகமாக பயன்படுத்துவதால் வாகனங்கள் வாங்குவது குறைந்துள்ளதாகவும், இதுவும் ஆட்டோமொபைல் துறையில் சரிவிற்கு ஒரு காரணம் என்றும் கூறியுள்ளார். நிர்மலா சீதாராமனின் இந்த கருத்தை அரசியல் தலைவர்கள் மற்றும் நெட்டிசன்கள் கேலி செய்தனர். 

இன்று, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர், பியூஸ் கோயல், இன்று, வர்த்தக மையத்தில்,  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,  செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
நம்நாடு 5 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார நிலையை அடைய வேண்டுமானால், 12 % வளர்ச்சியுடன் செல்ல வேண்டு. ஆனால் நாம் தற்போது, 6-7 வரையான வளர்ச்சி தான் கொண்டுள்ளோம்.  ஆகையால் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு கணக்குப் போட வேண்டாம்! அத்துடன் இந்த பொருளாதாரத்தில் கணக்கீடுகளைக் கொண்டுவராதீர்கள்... ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க அவருக்கு கணக்கு உதவவில்லை என உதாரணம் கூறியுள்ளார்.
 
தற்போது, அமைச்சர் கூறிய, அந்த உதாரணம்தான் நாட்டில் பேசுபொருளாகியுள்ளது. புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்து நியூட்டன் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில், அமைச்சர் பியூஸ் கோயல் , ஒரு ‘கன்பியூஸில் ’பெயரை மாற்றிக் கூறியதை வைத்துக்கொண்டு நெட்டிசன்ஸ் அவரை சமூக வலைதளத்தில் கலாய்த்துவருகின்றனர்.