கோயம்புத்தூரில் கொரோனா தேவி கோவில்! – வைரலாகும் புகைப்படம்
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவையில் கொரோனாவுக்கு கோவில் கட்டியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அரசு தீவிர முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்கு பலரும் நிதியளித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் கோயம்புத்தூர் இருகூர் அருகே கொரோனாவை கடவுளாக பாவித்து கொரோனா தேவி சிலை அமைக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா தேவி சிலையை 48 நாட்கள் வைத்து பூஜை செய்து பின் பிரதிஷ்டை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.