1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (12:51 IST)

கூட்டுறவு சங்க நகைக்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! – அரசு அறிவிப்பு!

தமிழக அரசு முன்னதாக அறிவித்தப்படி கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்குள் மக்கள் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடனை முற்றிலும் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் திமுக ஆட்சியமைத்த நிலையில் இந்த நகைக்கடன் பெற்றவர்களில் பலர் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்ற தகுதியுள்ள பயனாளர்களின் கடன் தொகை 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் 14.40 லட்சம் பயனாளர்கள் பயன்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.