திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (08:16 IST)

சிங்கப்பூரில் மீண்டும் மரண தண்டனை அமல்.. அடுத்த வாரம் ஒருவருக்கு தூக்கு..!

சிங்கப்பூரில் கடந்த ஆறு மாத காலமாக மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மரண தண்டனை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சர்வதேச அளவில் மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என குரல் எழுந்த நிலையில் சிங்கப்பூரில் மரண தண்டனை கடந்த ஆறு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் மரண தண்டனை அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு அடுத்த வாரம் போதை பொருள் வடக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன 
 
போதைப் பொருள் கடத்த முயன்றதாக கடந்த 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஒருவருக்கு 2018 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு வரும் 26 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மரண தண்டனை நிறுத்தி வைத்திருந்த சிங்கப்பூர் அரசு திடீரென மீண்டும் மரண தண்டனையை அமல்படுத்த இருப்பதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை மன்னிக்க முடியாது என்று அதற்கு கண்டிப்பாக மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva