1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (11:02 IST)

முதல்வர் திடீர் ஆய்வு: பணியில் இல்லாத அதிகாரி சஸ்பெண்ட்

stalin
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திடீரென ஆய்வுகளில் ஈடுபட்டு பணியில் இல்லாத அரசாங்க ஊழியரை சஸ்பெண்ட் செய்துள்ளார் என்ற தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதல்வர் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ராணிப்பேட்டை கூட்ரோடு என்ற பகுதியில் இயங்கி வந்த  குழந்தைகள் நல மையத்தில் முதல்வர் என்று திடீரென ஆய்வு செய்தார் 
 
அப்போது அந்த குழந்தைகள் நல மையத்தில் உள்ள அதிகாரி பணியில் இல்லாததால் உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில் வரும் முதல்வர் கேரக்டர் போலவே தமிழக முதல்வர் செயல்பட்டு வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்