1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 19 அக்டோபர் 2024 (12:30 IST)

பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்படும்: முதல்வர் ஸ்டாலின்

Stalin
தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் இன்றைக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது:
 
பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களை முளையிலேயே கிள்ளி எறியத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
 
தமிழ்நாடு அமைதியான மாநிலம், அங்கு அமைதியின்மையை உருவாக்க எதையாவது பரப்புவீர்களா என யூடியூபர் வழக்கு ஒன்றில் சமூக வலைதளத்தால் ஏற்படும் பாதிப்பு பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையாகச் சாடியுள்ளார்.
 
சமூக வலைதளத்தில் பரவக்கூடிய வதந்திகளைத் தடுக்க மிகுந்த கண்காணிப்போடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்"
 
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தை தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளது;
 
கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்தவர்களுக்கு சிறை தண்டனை மட்டுமின்றி, அவர்கள் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன"
 
இவ்வாறு தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
 
Edited by Mahendran