திங்கள், 5 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 நவம்பர் 2021 (13:50 IST)

ஓட்டு போடாதவர்களுக்கும் பணியாற்றுகிறேன்: கோவை விழாவில் முதல்வர் ஸ்டாலின்

ஓட்டு போடாதவர்களுக்கும் பணியாற்றுகிறேன்: கோவை விழாவில் முதல்வர் ஸ்டாலின்
ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமின்றி ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுகிறேன் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று கோவையில் நடந்த விழாவில் தெரிவித்துள்ளார்
 
வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுவது தான் எங்கள் நோக்கம் என்றும் கோவை மாவட்ட வளர்ச்சிக்காக அரசின் பணிகளை கவனிக்க அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்துள்ள உள்ளேன் என்றும், அனைத்து மாவட்ட மக்களும் என் மக்கள் தான் என்ற வகையில் பணியாற்றுவேன் என்றும் முதல்வர் கூறியுள்ளார் 
 
அப்படித்தான் அண்ணா கலைஞர் எங்களை வளர்த்திருக்கிறார் என்று தெரிவித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின், கோவையில் விமான விரிவாக்கத் திட்டத்திற்கு ரூபாய் நூற்றி முப்பத்தி இரண்டு கோடியை அரசு ஒதுக்கி உள்ளது என்றும் விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
மேலும் சென்னை போலவே கோவை நகரின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தர முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்