அமித்ஷா வருகிறார் என்ற செய்தியால் முதலமைச்சருக்கு காய்ச்சல் வந்துவிட்டது: அண்ணாமலை..
அமித்ஷா வரும்போது லைட்டை வேண்டுமானால் ஆப் செய்யலாம் ஆனால் தொண்டர்களின் உணர்வை ஆப் செய்ய முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நேற்று வேலூரில் நடைபெற்ற அமித்ஷா கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை இந்த கூட்டத்தை பார்த்து நம்முடைய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நேற்றிலிருந்து காய்ச்சல் ஜுரம் வர ஆரம்பித்துவிட்டது.
தமிழக மண்ணிற்கு அவர் அமித்ஷாஜி வந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் சேலத்தில் காய்ச்சல் தொடங்கி விட்டது. ஒன்பது வருஷங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள் என முதலமைச்சர் கேட்டார், அதை சொல்வதற்காக தான் இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
அமித்ஷா வரும்போது லைட்டை வேண்டுமென்றால் ஆப் பண்ணலாம் தொண்டர்களுடைய உற்சாகத்தை எப்போதும் உங்களால் ஆப் செய்ய முடியாது. 2024 பாராளுமன்றத்தில் தேர்தலில் தமிழகத்தில் நம்முடைய கூட்டணி 25 எம்பிக்களை குறைந்தபட்சம் புதிய பாராளுமன்றத்தில் அமர வைப்போம் என்று அண்ணாமலை தெரிவித்தார்
Edited by Mahendran