வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 ஜனவரி 2024 (07:51 IST)

பூந்தமல்லியில் ரூ.540 கோடி மதிப்பில் நவீன திரைப்பட நகரம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பூந்தமல்லி அருகே ரூ.540 கோடி மதிப்பில் நவீன திரைப்பட நகரம் கட்டப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்டை மாநிலங்களில் பிரம்மாண்டமான திரைப்படம் நகரம் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒரு திரைப்பட நகரம் இல்லை என்ற குறை திரையுலகினருக்கு இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பூந்தமல்லியில் ரூபாய் 540 கோடி மதிப்பில் நவீன ஃபிலிம் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். 25 கோடி மதிப்பில் நான்கு படப்பிடிப்பு தளங்களுடன் எம்ஜிஆர் பிலிம் சிட்டி புரொடக்ஷன், போஸ்ட் புரொடக்ஷன், உள்ளிட்ட அனைத்து பணிகளும் 5 நட்சத்திர ஓட்டல் வசதியுடன் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

நேற்று நடந்த கலைஞர் 100 விழாவில் முதலமைச்சர். மு க ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் திரையுலகினர் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva