திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 19 அக்டோபர் 2022 (16:37 IST)

காங்., புதிய தலைவர் கார்கேவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி  பெற்றுள்ள இலையில்   முதல்வர் ஸ்டாலின் அவருக்கு  வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது

நாடு முழுவதும் பல மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று காலை 10 மணி முதலாக வாக்கும் எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தது.

மொத்தம் பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகளை பெற்றுள்ளார் மல்லிகாஜூன கார்கே, அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1072 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். 416 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மல்லிகார்ஜூன கார்கே அடுத்த காங்கிரஸ் தலைவராக பதவியேற்க உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக நேரு குடும்பத்தை சாராத ஒருவர் பொறுப்பு ஏற்பது இதுவே முதல்முறை. பலரும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ்க மூத்த தலைவர்கள்  இன்று மல்லிகார்ஜூனே கார்கேவின் வீட்டிற்குச் சென்று வாழ்த்துகள் தெரிவித்தனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் புதிய காங்கிரஸ் தலைவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் மதச்சார்பற்ற  மற்றும் உள்ளக்கிய நெறிமுறைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் இணைந்து போராடும் கட்டத்தில்  பாரம்பரியமுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வான உங்களுக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj