திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 13 ஜூலை 2020 (18:38 IST)

தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு

ஒருபுறம் தமிழகம் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகம் ஏற்படுத்திக் கொண்டு வந்தாலும் இன்னொருபுறம் தொழில் நிறுவனங்களை முதலீடு செய்ய தமிழக முதல்வர் அழைப்பு விடுத்து வருகின்றார் 
 
ஏற்கனவே உலகில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்போது இந்து முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்
 
முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான பெடக்ஸ், யுபிஎஸ் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி சவுதி அரெம்கா, எக்ஸன் மொபில் கார்ப், சிபிசி பெட்ரோல் கெமிக்கல் நிறுவனங்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்
 
தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவு, ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் இந்த அழைப்பை ஏற்று முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்