முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன?: பகீர் தகவல்!
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன?: பகீர் தகவல்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். மருத்துவக்குழுவின் தீவிர சிகிச்சையால் குணமடைந்து, வீட்டிற்கு செல்லும் நிலையில் இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு வந்துள்ளது. ஓராளவு குணமாகி வந்த சூழலில் நேற்று மீண்டும் மூச்சு திணறல் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து அவர் உடனடியாக முதல் தளத்தில் உள்ள ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லப்பட்டார். மூச்சு திணறல் அதிகமாகி அது இதயத்தை தாக்கியதால் தான் அவருக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் வந்ததாக மருத்துவமனை வட்டார தகவல்கள் கூறுகின்றன.
நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் இதய சிகிச்சை மருத்துவர்கள் விடுமுறையில் இருந்துள்ளனர். முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட அவர்கள் உடனடியாக அழைக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். மேலும் டெல்லி எயிம்ஸ் மருத்துவர்களும் அப்பல்லோ வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர்.
பின்னர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹார்ட் லங் மெஷின் எனப்படும் ECMO மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.