வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2019 (12:47 IST)

அசால்ட்டா விட்டுராதீங்க... அலர்ட்டான எடப்பாடியார்!!

தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். 
 
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனுடன் தற்போது வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகுவதால் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
மழைக்கு வெப்ப சலனமும் ஒரு காரணமாக இருந்தாலும், அரபிக்கடலில் 55 கிமீ வேகத்தில் காற்றுவீசும் என்பதால் மீனவர்கள் 2 நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
இந்நிலையில் முதவர் எடப்பாடி பழனிச்சாமி, தென்மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும், தாழவான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு நிவாரண முகாமில் தங்க வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 
 
இதனுடன் வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை கண்காணித்து தகவலை தனக்கு உடனுக்குடன் அனுப்ப வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.