1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 31 டிசம்பர் 2020 (18:17 IST)

ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கான நோபல் பரிசு கொடுக்கலாம்! முதல்வர் கிண்டல்!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பதும், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதும், குறிப்பாக அதிமுக திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர் என்பதும் தெரிந்ததே
 
அதிமுக தரப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல தலைவர்களும் திமுக தரப்பில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் பிரசாரத்தை தொடங்கி விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அதிமுக, திமுக என இரு தரப்பிலும் மாறி மாறி குற்றச்சாட்டுகள் கூறி வருவதும் அதற்கு பதில் அளித்து வருவதும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் தேர்தல் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொய் பேசுவதில் நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கொடுக்கலாம் என்று கிண்டலுடன் பதில் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முதல்வரின் இந்த கிண்டலுக்கு முக ஸ்டாலின் தரப்பில் இருந்து என்ன பதிலடி வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்