புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (15:59 IST)

இட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சக அமைச்சர்களுடன் அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்டார்.
நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று பல்வேறு குழந்தைகள் நலத்திட்டங்களை துவக்கி வைத்த முதலமைச்சர் சென்னை எழும்பூரிலுள்ள அம்மா உணவகத்திற்கு அமைச்சர்கள் புடைசூழ சென்றார்.
 
பின்னர் அமைச்சர்களுடன் சேர்ந்து இட்லி சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு கொடுக்கும்படு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார்.