1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 20 மார்ச் 2017 (18:03 IST)

விஷ வாயு தாக்கி 3 துப்புரவு தொழிலாளர்கள் பலி

கடலூர் மாவட்டத்தில் பாதாளச் சாக்கடை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி மூன்று துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.


 

 
கடலூர் மாவட்டத்தில் பாதாளச் சாக்கடை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி மூன்று துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தற்போது அவர்களது உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
 
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு தொழிலாளர்கள் பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யக்கூடாது என அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். பாதளச் சாக்கடை துப்புரவு தொழிலாளர்கள் இறங்கி சுத்தம் செய்யக்கூடாது என சட்டம் உள்ளது. 
 
இருந்தும் இந்த உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த சம்பவம் எப்படி நடைப்பெற்றது என விசாரணை நடந்து வருகிறது  
 
துப்புரவு தொழிலாளர்கள் தொடர்ந்து மரணமடைந்து வரும் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் எந்தவொரு பாதுகாப்பு கவசமும் இல்லாமல் சுத்தம் செய்யும் போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்கிறது. அரசு சார்பில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறதா என்பதில் சந்தேகம் நீடித்து வருகிறது.