1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2024 (17:39 IST)

விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர் பலி.!!

karaikudi
காரைக்குடியில் செப்டிக் டேங்க் விஷவாயு தாக்கி துப்புரவு பணியாளர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் நாச்சியப்பன் மகன் சேவகப் பெருமாள் 45. இவர் நகராட்சி துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.

இவரது வீட்டின் அருகே வசிக்கும் ரவி என்பவரது வீட்டில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும்போது  வீட்டின் செப்டிக் டேங்க் மூடியை திறந்துள்ளார்.  அப்போது, செப்டிக் டேங்க் விஷ வாயு தாக்கி சம்பவ இடத்திலேயே சேவகப் பெருமாள் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த அழகப்பபுரம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். விஷவாயுத்தாக்கி துப்புரவு தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது