வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (11:14 IST)

'சித்திரைத் திருவிழா நாளில் தேர்தல்” - மதுரை மக்கள் கடும் அதிருப்தி

மக்களவைத் தேர்தல் நாடுமுழுவதும் வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தமிழகம் மற்றும் புதுவையில், அனைத்து தொகுதிக்கும்  ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ம் தேதி   தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


 
இந்த அறிவிப்பை கேட்டு மதுரை உள்பட தென்மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நன்நாளில் 10 லட்சம்மக்கள் ஒன்று கூடுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு இதற்கான சித்திரைத் திருவிழாவின் தேரோட்டமும் எதிர்சேவையும் நிகழும் ஏப்ரல் 18ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது மதுரையில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரை மட்டுமல்லாமல், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவங்கை என் சுற்றியுள்ள எல்லா மாவட்டங்களிலும் சித்திரை திருவிழாவும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபமும் நடைபெறும் எனவே தென் மாவட்ட மக்கள் தேர்தல் தேதியை  மாற்றி அமைக்க வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் தேர்தல் ஆணையம் தமிழத்தில் தேர்தல் தேதியை மாற்ற பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.