வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 பிப்ரவரி 2019 (15:18 IST)

வாக்காளர் பட்டியல் திருத்தம் – இன்றும் நாளையும் கடைசி வாய்ப்பு !

கடந்த ஜனவரி மாதம் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்வதற்கு இன்றும் நாளையுமே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியன்று மாதிரி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தமிழகத் தேர்தல் ஆணையம். பட்டியலில் உள்ள பிழைகள் மற்றும் விடுபட்ட பெயர்களை சேர்த்தல் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பெயர் இருத்தல் போன்றவற்றைத் திருத்தும் பணி மூன்று மாதக்காலமாக நடைபெற்று வந்தது.

இந்தப் பணிகள் இப்போது முடிந்துள்ள நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இன்று இதை வெளியிட்டுள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டார். இதில் 31 ஜனவரி 2019 இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழக மொத்த வாக்காளர்கள் 5.91 கோடி பேர். இதில் ஆண்கள் 2.92 (2,9256,960) கோடி பேர். பெண்கள் 2.98  (2,98,60,765) கோடி பேர். மூன்றாம் பாலினத்தவர் 5472  பேர் ஆகும்.

இந்நிலையில் இந்தப் பட்டியலில் மாற்றம் மற்றும் சேர்க்கை ஆகியவைத் தொடர்பான திருத்தங்களுக்காக இன்றும் நாளையும் அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்  நடைபெற்று வருகின்றன. இந்த முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

வாக்காளர்கள் தத்தம் பெயரைச் சேர்ப்பதற்கு படிவம் 6, பெயரை நீக்குவதற்கு படிவம் 7, திருத்தங்களுக்குப் படிவம் 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 ஏ ஆகியவற்றைப் பெற்று பூர்த்தி செய்து  அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.