தனியாக இருந்த பெண்ணின் கண்ணில் மிளாகாய் பொடி தூவி கை கால்களை கட்டி தலையில் பலமாக தாக்கி 3 பவுன் தாலி செயின் பறிப்பு!!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த காரணம்பேட்டை அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் பால்பாண்டி இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது மனைவி சரண்யா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவரின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி கை கால்களை கட்டி தலையில் பலமாக தாக்கி கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தாலி சங்கிலி பறித்துக் கொண்டு தப்பி ஓடிதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை சில மணி நேரத்திலே பிடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கண்களில் மிளகாய் பொடி தூவி கை கால்களை கட்டி தலையில் பலமாக தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.