1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (12:25 IST)

சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி: முன்பதிவு துவங்குவது எப்போது?

15 - 18 வயதான சிறார்கள் கோவாக்சின் தடுப்பூசி போட COWIN-ல் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என தகவல். 

 
தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 33,20,000 பேர் இருக்கிறார்கள். மத்திய அரசின் வழிகாட்டுதல் படி ஜனவரி 3 ஆம் தேதியே தமிழ்நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கும். 
 
அதேபோல், தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடியே நான்கு லட்சம் பேருக்கும், முன்கள பணியாளர்கள் 9 லட்சத்து 78 ஆயிரம் பேருக்கும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி செலுத்தப்படும்.
 
15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் 15 முதல் 18 வயதான சிறார்கள் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஜன.1 முதல் முன்பதிவு தொடங்குகிறது. 15- 18 வயதான சிறார்கள் கோவாக்சின் தடுப்பூசி போட COWIN-ல் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஆதார் இல்லாதவர்கள் 10 ஆம் வகுப்பு ஜ.டி.கார்டை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.