98 நாடுகள் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்!
பஹ்ரைன் நாடும் சேர்ந்து இதுவரை 98 நாடுகள் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
ஹாங்காங், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 97 நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியது. தற்போது இந்த பட்டியலில் இப்போது பஹ்ரைன் நாடும் சேர்ந்துள்ளது. இதனால் இதுவரை 98 நாடுகள் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.