செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 டிசம்பர் 2017 (10:46 IST)

முப்படை அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் திடீர் ஆலோசனை

தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முப்படை அதிகாரிகளுடன் இன்று காலை 11.30 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
 
சமீபத்தில் ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்ட நிலையில் இந்த புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயினர். இவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டுவிட்டாலும் இன்னும் ஒருசிலரின் நிலை என்னவென்று தெரியவில்லை
 
இந்த நிலையில்  சென்னை தலைமைச் செயலகத்தில் முப்படை அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். 
 
கடலில் சிக்கிய மீனவர்கள் மீட்பு மற்றும் கடல் எல்லைகளை விரிவுபடுத்துவது குறித்து அவர் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. மேலும் வட தமிழகத்தை நெருங்கும் புது புயலை சமாளிக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அவர் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.