கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
அதிமுக முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
அவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை,வேலூர், திருவண்ணாமலை உள்பட அவருக்கு சொந்தமான 20 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.