1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 டிசம்பர் 2024 (07:25 IST)

முதலமைச்சரின் உறுதி கொண்ட நெஞ்சத்தை மனமாரப் பாராட்டுகிறேன்: கமல்ஹாசன்

Kamal
மக்கள் பிரச்சனையை நெஞ்சுக்கு நெருக்கமாக அணுகும் முதலமைச்சரின் உறுதிகொண்ட நெஞ்சத்தை மனமார பாராட்டுகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் என்ற திட்டம் கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு மதுரை மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனை அடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்தை கொண்டு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர், மதுரை டங்ஸ்டன்  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனி தீர்மானம் இயற்றினார்.
 
அவர் பின்னர் பேசும்போது, "நான் முதலமைச்சராக இருக்கும் வரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டேன். என்னையும் மீறி இந்த திட்டம் நிறைவேறினால், ராஜினாமா செய்து விடுவேன்," என்று கூறினார். இந்த நிலையில், முதலமைச்சரின் உரைக்கு கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
 
மக்களின் விருப்பத்துக்கு மாறாக அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையக் கூடாது என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் முதல்வர் ஸ்டாலின்  நெஞ்சுரத்தோடு எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு பாராட்டத்தக்கது. 
 
‘நான் முதலமைச்சராக இருக்கும்வரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது’ என்று முதலமைச்சர் சட்டசபையில் பேசியிருப்பது மக்கள் மீதான அவரது  அக்கறையையும் இயற்கை காக்கப்பட வேண்டும் என்பதில் அவருக்கிருக்கும் ஈடுபாட்டையும் தெளிவுபடக் காட்டுகிறது. 
 
மக்கள் பிரச்னையை நெஞ்சுக்கு நெருக்கமாக அணுகும் முதலமைச்சர் அவர்களின் உறுதி கொண்ட நெஞ்சத்தை மனமாரப் பாராட்டுகிறேன்.
 
Edited by Mahendran