வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2023 (21:10 IST)

அந்த ''ஹாய்செல்லம்...வாடி செல்லம் என் பிட்டுதான்'' - சீமான் தகவல்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர். அரசியலில் ஈடுபடுவதற்கு முன்  தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வந்தார்.
 

இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துகள் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்., பசும்பொன் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். பல படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சீமான்,’’ கில்லி படத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் 'ஹாய் செல்லம், வாடி செல்லம்' என்று பேசியது என் டயலாக்’’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:   ‘’பாஞ்சாலங்குறிச்சி படத்தில் வடிவேலுவை இயக்கும்போது, அவரை வா செல்லம், இங்க போடி, வாடி என்று நானும் அவரும் பேசிக் கொள்வோம்...இது அப்படியே பரவிவிட்டது. 

இதை, கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும்போது சேர்த்துவிட்டார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.