வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 5 ஜூலை 2022 (10:15 IST)

இன்று தேரோட்டம்.. நாளை திருமஞ்சன விழா! – சிதம்பரம் நடராஜர் கோவில் சிறப்பு ஏற்பாடுகள்!

chidambaram
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா நாளை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் அண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் திருமஞ்சன விழா மற்றும் தேரோட்டம் மிகவும் பிரபலமானவை. இந்த ஆண்டு திருமஞ்சன விழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றன. இன்று திருவிழாவின் முக்கிய வைபவமான தேரோட்டம் தொடங்கியுள்ளது. அதிகாலை 5 மணியளவில் தொடங்கிய இந்த தேரோட்டத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் வலம் வருகின்றனர். நாளை சிகர நிகழ்வாக திருமஞ்சன விழா நடைபெற உள்ளது. இதை காண பல்வேறு பகுதி மக்களும் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.