ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 3 செப்டம்பர் 2016 (16:07 IST)

கடல் கடந்து சேரனுக்கு எதிர்ப்பு!

கடல் கடந்து சேரனுக்கு எதிர்ப்பு!

இலங்கை தமிழர்கள் வெளிநாடுகளில் திருட்டு வி.சி.டி. தயாரித்து தமிழகத்திற்கு அனுப்புவதாகவும். அவர்களுக்காக போராடியதை நினைத்து வேதனைப்படுகிறேன் எனவும் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார் இயக்குனர் சேரன்.


 
 
சேரனுடைய இந்த கருத்துக்கு பல பிரபலங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் இலங்கை திரைப்பட இயக்குனர் ரசிம் சேசரன் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
 
ரசிம் சேசரன், சேரனின் சி2எச் நிறுவனத்தின் இலங்கை பொருப்பாளர் ஆவார். அவரது குற்றச்சாட்டில் திருட்டு விசிடியை ஒழிப்பதற்காகவே சேரன் சி2எச் நிறுவனத்தை ஆரம்பித்தார். இலங்கையிலும் இது தொடங்கப்பட்டு 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து சி2எச் நிறுவனத்தை பிரம்மாண்டமாக ஆரம்பித்ததாகவும் கூறினார்.
 
ஆனால் சேரனால் இலங்கையில் சி2எச் திரைபடத்தை கொண்டு வர இயலவில்லை என்றும் மேலும் தான் இயக்கிய ஒரு படத்தை சி2எச்-ல் வெளியிட்டதாகவும் மேலும் 25 லட்சம் இதற்காக செலவிட்டதாகவும்.
 
இதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். நான் சி2எச் காக செலவழித்த பணத்துக்காக இழப்பீடு கோரவில்லையென்றும் வழக்கும் தொடரப்போவதில்லை  என்றும் இலங்கை தமிழர்களை இழிவாக விமர்சனம் செய்த சேரன் பகிரங்க மன்னிப்பு கேட்டால், அவரது படத்தை இலங்கையில் வெளியிடும்போது, ஆதரவு தெரிவிப்போம். என்றார்.