1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2022 (11:38 IST)

Red Bus on Red Alert! பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பெங்களூரில் இருந்து சென்னைக்கு விஎச்பி டிராவல்ஸ் மூலம் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.


ஜூலை 7 ஆம் தேதி ஸ்ருதி எனும் இளம்பெண் பெங்களூரில் இருந்து சென்னைக்கு விஎச்பி டிராவல்ஸ் மூலம் சென்று கொண்டிருந்தார். இந்த பயணத்திற்கான டிக்கெட்டை ரெட்பஸ் செயலில் மூலம் வாங்கினார்.

அந்த பெண் விடியற்காலை வேளையில், அவள் தூங்கிக் கொண்டிருந்த போது யாரோ தன்னைத் தடவிப் பார்ப்பதை உணர்ந்தாள். இதனால் உடனடியாக redBus செயலியில் புகார் அளித்துள்ளார். பின்னர் பேருந்து நிறுத்தப்பட்டு இதற்கு காரணமால பஸ் ஊழியரை பேருந்து ஓட்டுநர் சாடியுள்ளா.

பின்னர் பேருந்து செனையை நோக்கி புறப்பட்டது. பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று redBus இடம் கேட்டபோது, அந்த ஊழியர் மீது பேருந்து நடத்துனர் நடவடிக்கை எடுப்பார் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் redBus அல்லது VHB டிராவல்ஸ் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்கவில்லை.

ஸ்ருதி இந்த சம்பவத்தைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட முடிவு செய்த போது, பஸ் நிறுவனம் மற்றும் redBus என்று போஸ்ட் போடப்பட்டவுடன் பயணம் தருவதாக சமரசம் பேசப்பட்டுள்ளது. ஆனால் இது பணத்தைப் பற்றியது அல்ல, இது வேறு யாருக்கும் நடக்காதபடி ஏதாவது செய்ய வேண்டும்.  எனக்கு தெரிந்தவரை, குற்றவாளி தலைமறைவாக உள்ளார். சென்னையில் பஸ் நின்றதும் அவர் ஓடிவிட்டார், மேலும் இந்த பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்று அந்த பெண் கூறியுள்ளார். 

redBus உடன் செயல்படும் பேருந்து நடத்துனர் மீது புகார் எழுப்பப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2016 ஆம் ஆண்டு, கோவாவில் இருந்து பெங்களூருவுக்குச் சென்ற பெண் ஒருவரை சீபேர்ட் டிராவல்ஸ் பேருந்து ஓட்டுநர் துன்புறுத்தியது குறிப்பிடத்தக்கது.