வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (10:41 IST)

சென்னைக்கு தொடர் மழை - வானிலை மையம் தகவல்

நேற்று விடிய விடிய சென்னையின் முக்கிய பகுதிகளில் பெய்த மழை இன்றும் தொடர வாய்ப்பு என தகவல். 
 
சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று விடிய விடிய சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திருவான்மியூர், அடையார், கிண்டி, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்து உள்ளது. 
 
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மேலும் சில மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.