1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 6 மே 2019 (16:15 IST)

சென்னையில் நாளை 7 மணி நேரம் பவர் கட்: அடிக்கிற வெயிலுக்கு இதுவேறயா...?

சென்னையின் சில குறிப்பிட்ட பகுதியில் நாளை (மே 7 ஆம் தேதி) 7 மணி நேரம் பவர் கட் இருக்கும் என செய்தி வெளியாகியுள்ளது. 
 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிமானக் கழகம் நாளை மேற்கொள்ள உள்ள பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை பவர் கட் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. 
 
மேலும், எந்நெந்த பகுதியில் பவட் கட் செய்யப்படும் என்ற லிஸ்டையும் வெளியிட்டுள்ளது. அதோடு, ஒருவேளை பராமரிப்பு வேலை விரைவில் முடிந்துவிட்டால் மாலை 4 மணிக்கு முன்னரே மின்சாரம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 
 
பவர் கட்டாகும் பகுதிகள்: 
 
1. அய்யப்பன்தாங்கல் மற்றும் போரூர் பகுதி: அய்யப்பன் தாங்கல், வி.ஜி.என் நகர், அசோக் நகர், சுப்பையா நகர், மேட்டுத் தெரு, பாலாஜி நகர், ஆர்.ஆர். நகர், காட்டுப்பாக்கம், வளசரவாக்கம், போரூர் கார்டன் பேஸ் பகுதி 1 & 2, ராமசாமி நகர், அர்பன் 3, ஆற்காடு ரோடு பகுதி, வானகரம், பாரணிபுத்தூர், காரம்பாக்கம், பூந்தமல்லி ரோடு, ஆபிசர்ஸ் காலனி, ராஜேஸ்வரி காலனி, திருமுருகன் நகர், செட்டியார் அகரம், ஓம் சக்தி நகர், விவேகானந்தர் நகர்.
2. மேனம்பேடு பகுதி: கங்கை நகர், செங்குட்டுவன் நகர், ஒரகடம், சந்திரசேகரபுரம், குனமூர்த்தி நகர், கருக்கு, விஜயலட்சுமி புரம், பானு நகர், புடூர், செங்குன்றம் ஒரு பகுதி, கல்லிக்குப்பம், மேனம்பேடு, பிரித்திபாக்கம்.
 
3. சோழிங்கநல்லூர் பகுதி: பரமேஸ்வரன் நகர், படவேட்டம்மன் கோயில், விலேஜ் ஹைரோடு, குமராசாமி நகர், குமரன் நகர், பாரதி நகர், ராஜீகாந்தி சாலை ஓ.எம்.ஆர்., கே.கே. சாலை, செல்லியம்மன் கோயில், துலுகாணத்தம்மன் கோயில், அலமேலு மங்காபுரம், எல்காட் அவென்யூ, கிலாசிக் பார்ம், மாடல் பள்ளி சாலை, டி.என்.எஸ்.சி.பி., டி.என்.எச்.பி., பாண்டிச்சேரி பேட்டை, விக்ணேஷ்வரா நகர், மெஜஸ்டிக் ரொஸிடன்சி, காந்தி ரோடு, எம்.ஜி.ஆர். ரோடு, பாரதி நகர், செம்மஞ்சேரி.