புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (05:01 IST)

முழு கட்டிடமும் இடிந்தது. சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் தற்போதைய நிலைமை

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று அதிகாலை பிடித்த தீ, தொடர்ந்து இரண்டாவது நாளாக எரிந்து கொண்டு உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் அந்த கட்டிடத்தின் 2வது மாடி முதல் 7வது மாடி வரை கட்டிடத்தின் உட்பகுதிக்குள்ளேயே இடிந்து விழுந்தது. கிட்டத்தட்ட மொத்த கட்டிடமும் இடிந்து விட்டாலும் தீ இன்னும் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது தீயணைக்கும் படை வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



 


தீ இன்னும் முழுவதும் அணையாததால் அந்த பகுதியில் முழுவதும் புகைமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் இடிந்து விழுந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

நள்ளிரவு நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தீ அணைக்கும் பணியை நேரில் வந்து ஆய்வு செய்தார். சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிந்து விழுந்த பகுதியிலிருந்து பொதுமக்கள் தொலைவில் இருக்க அறிவுறுத்திய அமைச்சர் இன்னும் சற்று நேரத்தில் முழு அளவில் தீ அணைக்கப்படும் என்று தெரிவித்தார்.