வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 5 ஜூன் 2017 (05:48 IST)

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணி திடீரென நிறுத்தம்

கடந்த மாதம் 31ஆம் தேதி சென்னை சில்க்ஸ் துணிக்கடையின் 7 மாடி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டு கட்டிடம் முழுவதுமே சிதிலம் அடைந்தது. மூன்று நாட்களுக்கு பின் தீயை போராடி அணைத்த வீரர்கள் அடுத்தகட்டமாக கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.



 


இந்த நிலையில் குறைந்த வெளிச்சம் காரணமாக சென்னை சில்க்ஸ் கட்டடத்தை 4-வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வந்த இடிக்கும் பணி நேற்று நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை இந்த பணி மீண்டும் தொடங்கும் என தெரிகிறது.

இந்த கட்டிடத்தின் மேல்பகுதியில் நீர் சுத்திகரிப்பு ராட்சத் இயந்திரம் மேல்பகுதியில் உள்ளதால் வெளிச்சம் குறைவான நேரத்தில் கட்டிடத்தை இடிக்கும் பணியை தொடர்ந்தால் அந்த ராட்சத இயந்திரம் கீழே விழும் அபாயம் இருப்பதால் கட்டிடம் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது முன்பகுதி முழுவதும் கிட்டத்தட்ட இடித்தாகிவிட்டது. பின்பகுதி மட்டுமே இன்னும் இடிக்க வேண்டியதுள்ளதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் இந்த பணி முற்றிலும் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.