திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (08:40 IST)

நாளை முதல் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் மாற்றம்: அதிரடி அறிவிப்பு

நாளை முதல் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
 
சென்னை மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ நாளை திங்கள்கிழமை (2308:2021) முதல்‌ காலை 530 மணி முதல்‌ இரவு 11 மணி வரை நீட்டித்து, இயக்கப்படவுள்ளன.
 
சென்னை மெட்ரோ இரயில்‌ பயணிகளின்‌ வேண்டுகோளுக்கு இணங்கவும்‌, வசதிக்காகவும்‌ நாளை திங்கள்கிழமை 23.08.2021 முதல்‌ வார நாட்களில்‌ (திங்கள்கிழமை முதல்‌ சனிக்கிழமை வறை) மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ காலை 530 மணி முதல்‌ இரவு 11:00 மணி வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளன. மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ நெரிசல்மிகு நேரங்களில்‌ காலை 08.00 மணி முதல்‌ 11.00 மணி வரையிலும்‌, மாலை 05.00 மணி முதல்‌ இரவு 08.00 மணி வரையிலும்‌ 5 நிமிட இடைவெளியில்‌ இயக்கப்படும்‌. மற்ற நேரங்களில்‌ 10 நிமிட இடைவெளியில்‌ மெட்ரோ இரயில்கள்‌ இயக்கப்படும்‌.
 
மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும்‌ அரசு பொது விடுமுறை நாட்களில்‌ காலை 7.00 மணி முதல்‌ இரவு 10.00 மணி வரை 10 நிமிட இடைவெளியில்‌ இயக்கப்படும.
 
மெட்ரோ இரயில்‌ நிலையங்கள்‌ மற்றும்‌ மெட்ரோ இரயில்களில்‌ நுழைவதற்கு அனைத்து பயணிகளும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிந்திருக்க வேண்டும்‌. பயணிகள்‌ முகக்கவசம்‌ அணியாவிட்டாலோ அல்லது முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசுலிக்கப்படுகிறது. 21.06.2021 முதல்‌ 21.08.2021 வரை முகக்கவசத்தை அணியாமல்‌ அல்லது சரியாக அணியாமல்‌ பயணம்‌ செய்ததற்காக 176 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.35200 வசுலிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா வைரஸ்‌ தொற்றை தடுப்பதற்காகவும்‌ அனைத்து பயணிகளின்‌ பாதுகாப்பான பயணத்திற்காகவும்‌ மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ நுழைவதற்கும் மெட்ரோ இரயில்களில்‌ பயணிப்பதற்கும்‌ அனைத்து பயணிகளும்‌ கட்டாயம்‌ சரியாக முகக்கவசம்‌ அணிந்திருப்பதுடன்‌ தனிமனித இடைவெளியைக்‌ கடைபிடித்து பயணம்‌ செய்து சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.
 
இவ்வாறு சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.